700. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோடு
     எய்தல் இல்லா இயல்பினது ; அதுவே
     ஆரிடத் துள்ளும், அவைபோல் பவற்றுளும்
     நேரும் என்மனார், நெறிஉணர்ந் தோரே.

     இதுவும் அது.

     இ-ள் : செய்யுள் வழு என்று சொல்லப்படுவது, செய்யுள் இலக்கணத்தோடு
 பொருந்தாத இயல்பினை உடைத்தாம். அதுவே, ஆரிடத்துள்ளும் ஆரிடப்
 போலியுள்ளும் பொருந்தும் என்று கூறுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு.