701. சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச் சந்தியொடு மருவாத் தன்மையது ; அதுவே இரண்டாம் வேற்றுமைக்கு எதிர்மறுத்து வருமே.
இதுவும் அது.
இ-ள் : சந்தி வழு என்று சொல்லப்படுவது, எழுத்திலக்கணத்தில் கூறிய சந்தியோடு மாறுபட்ட இயல்பினை உடைத்தாம். அதுவே, இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் அவ்வாறு மாறுபட்டுவரும் என்றவாறு.