நிறுத்தமுறையானே வழுவும் சிறுபான்மை வழுவமைதியும் கூறி, எஞ்சிநின்ற மலைவு ஆறனையும் கூறுவான் புகுந்து, அவற்றுள் இஃது இடமலைவு என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
மலை என்பது இமயம் பொதியம் முதலாயின. யாறு கங்கை கங்கை காவிரி முதலாயின. நாடு பதினெண்பாடைக்கும் உரிய நிலங்கள்.