703. காலம், பொழுது பருவம் என்றுஇவற்றின்,
     ஒன்றற்கு உரியன அன்றி, ஒன்றற்கு
     உரியன வாக உரைப்பதுஅதன் மலைவே.

     இதுவும் அது.

     இ-ள் : காலம் என்று சொல்லப்படுவது சிறுபொழுதும் பெரும் பொழுதும் ஆம்
 அவற்றுள் ஒரு காலத்திற்கு உரிய பூவம் புள்ளும் தொழிலும் பிறிது ஒரு காலத்திற்கு
 உளவாகக் கூறுவது கால மலைவாம் என்றவாறு.