704. கலைஎனப் படுமவை காண்தக விரிப்பின்
     காமமும் பொருளும் ஏமுறுத் தழுவி,
     மறுஅறக் கிளந்த அறுபத்து நான்கு ; அவை
     மலைய உரைப்பன கலைமலைவு ஆகும்.

     இதுவும் அது.

     இ-ள் : கலை என்று சொல்லப்படுவனவற்றை விளங்க உரைக்கும் இடத்து,
 இன்பமும் பொருளும் பொருத்தமுறத் தழுவிக் குற்றம்அறச் சொல்லப்பட்ட
 அறுபத்துநான்குமாம் ; அவை தம்முள் மலைய உரைப்பன கலைமலைவாம் என்றவாறு.