705. உலகுஎனப் படுவதுஈண்டு ஒழுக்கின் மேற்று ; அவ்
வொழுக்கநெறி பிறழ உரைப்பதுஅதன் மலைவே.
இதுவும் அது.
இ-ள் : உலகு என்று சொல்லப்படுவது, பல பொருள் உணர்த்துமேனும் ஈண்டு
ஒழுக்கத்தின் மேலிடத்தாம் ; அவ்வுலகத்தின் ஒழுக்கநெறியை மாறு பட உரைப்பது
உலகமலைவாம் என்றவாறு.