707. ஆகமம் என்பது மனுமத லாகி
அறனொடு புணர்ந்த திறன்அறி நூல் ;அவை
தம்முள் உரைக்கும் ஒழுக்க நெறியின்
இழுக்க உரைப்பது ஆகம மலைவே.
இதுவும் அது.
இ-ள் : ஆகமம் என்று சொல்லப்படுவது மனு முதலாக அறத்தொடு கூடிய
திறங்களை அறியும் பதினெண்வகை நூல்களாம் ; அந் நூல்களில் கூறப்படும்
அறநெறிகளை அம் முறையால் கூறாது பிறழக் கூறுவது ஆகம மலைவாம் என்றவாறு.