இது மேற்கூறிய மலைவு ஆறனையும் இன்னுழி ஆம் என்கின்றது,
இ-ள் : இடம் முதலாக ஆகமம் ஈறாக இங்ஙனம் கூறிய முறையமையான் வரும்
அறுவகை மலைவும், நாடக வழக்கினிடத்துச் சொல்லுதற்கு உரியனவாம் என்றவாறு.
ஈண்டு நாடக வழக்கு என்றது, இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்துரைவகையாற் கூறுதலாம் ; எனவே, அவ்வாறு புகழ்ச்சி இடத்து நீக்கப்படா
அலங்காரமாயே வரும் என்பதாம்.