709. மெய்பெற விதித்த செய்யுள் திறனும்,
எய்திண நெறியும், ஈரைங் குணமும்,
ஐஎழு வகையின் அறிவுறும் அணியும்,,
அடியினும் சொல்லினம் எழுத்தினும் இயன்று
முடிய வந்த மூவகை, மடக்கும்,
கோமூத் திரிமுதல் குன்றா மரபின்
ஏம்உறக் கிளந்த மிறைக்கவி இருபதும்,
இவ்வகை இயற்றுதல் குற்றம், இவ்வகை
எய்த இயம்புதல் இயல்பு? என மொழிந்த
ஐவகை முத்திறத்து ஆங்கஅவை உளப்பட
மொழிந்த நெறியின் ஒழிந்தவும் கோடல்
ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே.
இஃது இவ்வோத்துள் கூறிய இலக்கணங்களை எல்லாம் தொகுத்துப் பிறவாறு வருவனவும் தழீஇக் கொள்க? எனப் புறனடை கூறுகின்றது.
இ-ள் : பொருள்பெற எடுத்து ஓதப்பட்ட அணி இலக்கணங்களை எல்லாம் தொகுத்துக் கூறுமிடத்து, முத்தகம் குளகம் தொகை தொடர்நிலை எனும் செய்யுள் பகுதியும், அச்செய்யுட்கு வைருப்பம் கௌடம் எனப் பொருந்திய நெறியும், அவற்றொரு தொடர்ந்த செறிவு முதலாகச் சமாதி ஈறாகச் சொல்லப்பட்ட குணங்கள் பத்தும், தன்மை முலாகப் பாவிகம் ஈறாகக் கிடந்த முப்பத்தைந்து அலங்காரமும், அடியினானும் |
|
|