செய்யுளியல் - நூற்பா எண் 19

103

 
 

முழுதும் - யா. வி. 55

 

 

`பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்'
 
 

- குறள் 1121
- தூங்கிசைச் செப்பல்

 
எனவும்,
  `கொல்லான், புலால் மறுத்தானைக் கைகூப்பி,
எல்லா உயிரும் தொழும்'
 
 

- குறள் 240
 - ஒழுகிசைச் செப்பல்

 
எனவும் முறையே காண்க.

     இவ்வோசையைத் தூக்கு என்று ஓர் உறுப்பாக்கி மேல் கூறுவாரும் உளர். மேல்
இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க.
(19)

விளக்கம்

     நிறுத்த முறை - 17 ஆம் நூற்பா. - தூக்காவது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும்
என்று இன்னோரன்னவற்றுமேல் நிற்கும் வரையறையாம் (தொ. பொ. 339. பே)
ஆசிரியப்பா ஓசையைச் செந்தூக்கு எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது.

ஒத்த நூற்பாக்கள்

 
என நிரைஅசைச் சீரானும் இறுதலே அன்றி உம்மையால்,
  `அகவல் என்பது ஆசிரி யம்மே.'  
 

- தொ. பொ. 393

 
  `அஃதான் றென்ப வெண்பா யாப்பே.'  
 

- தொ. பொ. 394

 
  `ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும்
ஒழுகிசைச் செப்பலும் உண்ணும் வெண்பா
செப்பல் ஓசை வெண்பா ஆகும்.'
 
 

 - சங்கயாப்பு

 
  `சிறந்துயர் செப்பல் இசையன ஆகி,
மறைந்த உறுப்பின் அகறல் இன்றி,
விளங்கக் கிடப்பது வெண்பா ஆகும்.'
 
 

- காக்கை

 
  `சிந்தடி யானே இறுதலும், அவ்வடி
அந்தம் அசைச்சீர் வருதலும், யாப்புற
வந்தது வெள்ளை வழங்கியல் தானே.'
 
 

- காக்கை