செய்யுளியல் - நூற்பா எண் 23

135

 

விளக்கம்

நிறுத்தமுறை - 17ஆம் நூற்பா.

ஒத்த நூற்பாக்கள்

  `தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய
இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்கு
அன்பா வரைந்த ஆசிரியம் என்ப.'
 
 

- அவிநயம்

 
  `ஏ-ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே,
ஓ-ஈ ஆயும் ஒரோவழி ஆகும்.'
 
 

 - அவிநயம்

 
  `என்என் சொல்லும் பிறவும்என் றிவற்று
உன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே.'
 
 

- அவிநயம்

 
  `இயற்சீர்த் தாகியும் அயற்சீர் விரவியும்
தன்தளை தழுவியும் பிறதளை தட்டும்
அகவல் ஓசையது ஆசிரி யம்மே.'
 
 

- மயேச்சுரம்

 
  `ஏயென்று இறுவது ஆசிரியத்து இயல்பே
ஓ-ஆ இறுதியும் உரிய ஆசிரியம்.'
 
 

- மயேச்சுரம்

 
  `நின்றது ஆதி நிலைமண் டிலத்துள்
என்றும் என்என்று இறுதிவரை வின்றே.'
 
 

- மயேச்சுரம்

 
  `அல்லா ஒற்றும் அகவலின் இறுதி
நில்லா அல்ல நிற்பன வரையார்.'
 
 

- மயேச்சுரம்

 
  `அகவல் ஓசை ஆசிரி யம்மே.'
முழுதும்
 
 

- யா. வி. 69

 
  `அகவ லோசை யொடுமள வடித்தாய்,
வருவது அகவற் பாவென மொழிப.'
 
 

- மு. வீ. யா. செ. 22

 
  `அகவல், ஏந்திசை அகவல், தூங்கிசை
அகவல், ஒழுகிசை அகவல்மூ வகைப்படும்.'
 
 

- 30