164

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `தாதுறு முறிசெறி தடமலர் இடைஇடை
     தழலென விரிவன பொழில்;'
`போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு
     கருநெய்தல் விரிவனகழி;'
தீதுறு திறமறு கெனநனி முனிவன
     துணையொடு பிணைவனதுறை;'
மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு
கழிதொடர் புடையதுகடல்;'
 
 

[இவை நான்கும் அராகம்]

 
  `கொடுந்திறல் உடையன சுறவேறு கொட்பதனால்
இருங்கழி இரவருதல் வேண்டாஎன்று இசைத்திலமோ?'

`கருநிறத் தடுதொழில் கராம்பெரி துடைமையால்
இருள்நிறத் தொருகானல் இராவாரல் என்றிலமோ?'
 
     
இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்.
  `நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே;
துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே;
அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளும் ஆயிழைக்கே;
நயப்பொடு கழிந்தன்றால்;நனவதுவும் நன்னுதற்கே.'
 
     
இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்.
  `அத்திறத்தால் அசைந்தன தோள்;
அலர்தற்கு மெலிந்தன கண்;
பொய்த்துரையால் புலர்ந்தது முகம்;
பொன்நிறத்தால் போர்த்தன முலை;
அழலினால் அசைந்தது நகை;
அணியினால் ஒசிந்தது இடை;
குழலினால் அவிர்ந்தது முடி;
குறையினால் கோடிற்று நிறை;
 
     
இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்.
  `உட்கொண்ட தகைத்தொருபால்;
உலகறிந்த வலத்தொருபால்;
கட்கொண்டல் துளித்தொருபால்;