174

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `பாடுவார் சிலர்; ஆடுவார் சிலர்;
பரவுவார் சிலர்; விரவுவார் சிலர்;

வாடுவார் சிலர்; ஓடுவார் சிலர்;
மகிழுவார் சிலர்; புகழுவார் சிலர்;ழு
 
 

- இவை இருசீரடி அம்போதரங்கம் 8.

 
 

ஆங்கொருசார்

 
 

 [தனிச்சொல்]

 

 [இது சுரிதகம்]
- சி. செ. கோ. 58

  `முதிரா இளமுலை மழலையந் தீஞ்சொல்
மங்கை மற்றிவள் நங்குலக் கொழுந்து
கணங்குழை யவரொடும் வணங்கினள் நிற்பச்
சோர்ந்தது மேகலை; நெகிழ்ந்தன தோள்வளை;
சாந்தமும் கரிந்தது; தரளமும் தீந்தன;
இவ்வா றாயினள் இவளே; செல்விதின்
ஆம்பல் பூவின் முல்லையும் முகைத்தில;
இளையோள் சாலவும் அம்ம;
முதியோள் போலும் காம நோய்க்கே.ழு
 
   
  வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் :
`தொல்லுலகம் படுசுடிகைக் சுடருமணி விளக்கேந்தும்
பல்பொறிய படஅடிவும் அடுபுலியும் பணிசெய்ய,
அந்தரதுந் துபிமுழங்க, அமரர்மலர் மழைசிந்த,
இந்திரனும் மலரவனும் கரியவனும் ஏத்தெடுப்ப,
சூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப,
ஆடகத் திருமன்றத் தனவரதம் நடஞ்செய்வோய்!
 
 

[தரவு]

 
  `மன்மலையும் கொலைமடங்கல் ஈருரியும் மும்மதத்த
வன்மலையும் கடமலையின் முடையுடலின் வன்தோலும்
பொன்மலையின் வெண்முகிலும் கருமுகிலும் போர்த்தென்ன,
வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே.ழு