180 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | | `வெள்ளருக்கும் கரும்பாம்பும் பொன்மத்தும் மிலைச்சிஎமது உள்ளிருக்கும் பெருமான் ! நின் திருமார்பில் உறஅழுத்தும் கள்ளிருக்கும் குழலுமையாள் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும் முள்ளெயிற்றுக் கறைஅரவம் முழைஎன்று நுழையுமால்.ழு அதாஅன்று | | | [தனிச்சொல்] | | | | `சிலைக்கோடு பொருமருப்பின் புகர்முகன்நின், நின்திருமார்பில் முலைக்கோடு பொருசுவட்டைக் கண்டு,நின் முடிவுத்தோள் மலைக்கோடி விளையாடும் பருவத்து, மற்றுத்தன் கொலைக்கோடு பட்டவெனக் குலைந்துமனம் கலங்குமால்.ழு அதாஅன்று | | | [தனிச்சொல்] | | | | `விடமார்ந்த சுடரிலைவேல் விடலை,நின் மணிமார்பில் வடமார்ந்த முலைச்சுவட்டைக் கண்டு,தன் மருப்பெந்தை தடமார்பம் விடர்செய்யச் சமர்செய்தான் கொல்என்று, கடமார்வெங் கவுள்சிறுகண் கயாசுரனை வியக்குமால்.ழு அதனால் | | | [தனிச்சொல்] | | | | `சிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண் முறைமுகம் கோட்டினள், நகுமால்; மலைமுகம் கோட்டுநின் மற்புயம் மறைந்தே,ழு | | | [சுரிதகம்] - 66 | | | பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் செய்யுள் : | | `ஒருநோக்கம் பகல்செய்ய, ஒருநோக்கம் இருள்செய்ய, இருநோக்கில் தொழில்செய்தும், துயில்செய்தும் இளைத்துயிர்கள் கருநோக்கா வகைகருணைக் கண்ணோக்கம் செயுஞானத் திருநோக்க அருள்நோக்கம் இருநோக்கும் செயச்செய்து, மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.ழு | | | [தரவு] | | | | | |
|
|