188

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
  `கொள்ளப் பட்ட உறுப்போ டிருதலையும்
தள்ளாது வருவது தலையளவு ஆகும்.'

`உடையதம் உறுப்பின் ஒன்றுகுறை வின்றி
இடைஅளவு இலக்கணம் இருதலை உறுப்பும்
ஐயைந் தடியாய் அமைவுறு தாழிசை
மூன்றும் மூன்றடியான் மூன்றுமுடி வெய்திப்
பேரெண் அறுசீர் இடைஎண் முச்சீர்
சேரும் சிற்றெண் சீரும்ஓர் அசையும்
நேர வேண்டும் நெறிஅறி புலவர்.'

`கடையள வென்பது உடைஉறுப்பு எஞ்சாது
முடிவும் முதலும் நாலடித் தாகி
 அடிவகை இரண்டின் தாழிசை மூன்றாய்ப்
பேரெண் இரண்டடி பெற்றபின் இடைஎண்
நேர்ப நான்கும் அரையடி முடிவில்
சிற்றெண் எட்டும் சீர்நா லிரட்டியும்
பெற்ற தாயி னதுகடை அளவே.'

`அம்மூ அளவிற்கும் அராகஅடி இரண்டே
ஈறும் முதலும் எல்லா அளவிற்கும்
கூறிய முறைமையிற் கொள்ள வேண்டும்.'

`முந்திய தாழிசைக்கு ஈறாய் முறைமுறை
ஒன்றினுக்கு ஒன்று சுருங்கும் உறுப்பினது
அம்போ தரங்கஒத் தாழிசைக் கலியே.'
 
 

- யா. வி. 83

 
  `அளவடி முதலா அனைத்தினும் நான்கடி
முதலா இரட்டியும் முடுகியல் நடக்கும்.'

`வண்ணகத் தியற்கை திண்ணிதின் கிளப்பின்
தரவொடு தாழிசை தலையவு எய்தித்
தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப்
பேரெண் இட்ட எண்ணுடைத் தாகிச்