| `பொருளோ டடிமுதல் நிற்பது கூன், அது வேபொருந்தி இருள்சேர் விலாவஞ்சி ஈற்றினும் நிற்கும்.' | | | - யா. கா. 45 | | |
| `பாமுதல் நிற்பதுகூன், வஞ்சியீற்றினும் பாதத்துள்ளும்.' | | | - வீ. சோ. 120 | | |
| `அடிமுதற் கட்பாப் பொருளைத் தழுவி தனியே நிற்பது கூனாம்; அக்கூன் வஞ்சியுள் இடைகடை முதலினும் வருமே.' | | | - மு. வீ. யா. ஒ. 21 | | |
வகையுளி ஆமாறு | 42 |
752. | அசையும் சீரும் அடியும் எல்லாம் இசைய வருபொருள் இயைபு நோக்காது ஓசையே குறிக்கொண்டு ஒடுங்கவும் விரியவும் அலகிடல், வகையுளி ஆகும் என்ப. | | | - மு. வீ. யா. ஒ. 21 | | |
இது வகையுளி ஆமாறு கூறுகின்றது. இ-ள் : அசையும் சீரும் அடியும் ஆகிய எல்லாவற்றின்கண்ணும் பொருந்த வருகின்ற பொருள் இயைபைக் குறியாது ஓசையினையே குறித்துக் கூம்பவும் கூம்பாது அலரவும் அலகிட்டு, வண்ணம் அறுத்தல் வகையுளியாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. வரலாறு : |
| `கடியார்பூங் கோதை கடாயினான், திண்தேர் சிறியார்தஞ் சிற்றில் சிதைத்து.' | | | - யா. கா. 45 மே. | | |
இதனுள், கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டுச்செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதையாதாம். |