274

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
[இப்பாடலில் அடுக்கல், எழிலி, கார், ஓங்கல், கலுழி வல்லியம் முதலிய திரிசொல் பல
பயின்றுள்ளமை காண்க.]
  `செறிதொடி! உவகை கேளாய்! செஞ்சுடர்த் தெறுகதிர்ச்
                                    செல்வன்'
 
     
என்பதூஉம் இராமாயணம் பாரதம் போல்வனவும் ஆகிய தொன்மையும்,
  `பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின்
ஆயிரம் மணிவிளக்கு அழலும் சேக்கைத்
துளிதரு வெள்ளம் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின்,
இம்மை இல்லை; மறுமை இல்லை;
நன்மை இல்லை; தீமை இல்லை;
செய்வோர் இல்லை; செய்பொருள் இல்லை;
அறிவோர் யார்அஃது இறுவுழி இறுகென'
 
 

- யா. கா. 45 மே.

 

[இது மார்க்கண்டேயனார் காஞ்சி]

என இழும் என்மொழியால் விழுமிது நுவன்ற தோலும்,
  `திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்'  
     
என்ற மலைபடுகடாம் ஆகிய பாடல்போலப் பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகிய
தோலும்,
  `பார்க்கடல் முகந்த பருவக் கொண்மூ
வார்ச்செறி முரசின் முழங்கி ஒன்னார்
மலைமுற் றின்றே; வயங்குதுளி சிதறிச்
சென்றவள் திருமுகம் காணக் கடுந்தேர்
இன்றுபுகக் கடவுமதி, பாக, உதுக்காண்,
மாவொடு புணர்ந்த மாஅல் போஒல்,
இரும்பிடி உழையது ஆகப்
பெருங்காடு மடுத்த காமர் களிறே'
 
 

- யா. கா. 45 மே.

 
எனப் புலனும்,