|
மூன்று அடியும் சிந்துஅடி என்றும், பத்து எழுத்து முதலாகப் பதினான்கு எழுத்தின்காறும் உயர்ந்த ஐந்து அடியும் அளவடி என்றும், பதினைந்து எழுத்து முதலாகப் பதினேழ் எழுத்தின்காறும் உயர்ந்த மூன்று அடியும் நெடிலடி என்றும், பதினெட்டு எழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த மூன்று அடியும் கழிநெடில் அடி என்றும், இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லை என்றும் கூறியவாறாம் என்க. எண்ணுமாறு : |
| `குற்றிகரக் குற்றுகரம் என்றிரண்டும், ஆய்தமும், ஒற்றும் எனஒரு நான்ககற்றிக், - கற்றோர் உயிரும் உயிர்மெய்யும் ஓதினார்; கொள்ளச் செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு' | | | | | |
இதனான் அறிக. | (45) |
ஒத்த நூற்பாக்கள் |
| `வனப்பியல் தானே வகுக்குங் காலை சின்மென் மொழியால் தாய பனுவலோடு அம்மை தானே அடிநிமிர் பின்றே.' | | | - தொ. பொ. 547 | | |
| `செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே.' | | | - 548 | | |
| `தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே.' | | | - 549 | | |
| `இழும்என் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோல்என மொழிப தொன்மொழிப் புலவர்.' | | | - 550 | | |
| `விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.' | | | - 551 | | |
| `ஞகாரை முதலா னகாரை ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே.' | | | - 552 | | |