288

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
     வரலாறு :
  `நெறிஅறி செறிகுறி புரிதரி பறியா அறிவனை முந்துறீஇ'  
 

- கலி. 39

 
என வரும்.

     இவ்வாறன்றி இன்னும் ஒருவாற்றான் குறில் நெடில் வல்லினம் மெல்லினம்
இடையினம் என நிறுத்தி அகவல் ஒழுகிசை வல்லிசை மெல்லிசை என்பனவற்றோடு
உறழ இருபதாம். அவற்றைத் தூங்கிசை ஏந்திசை அடுக்கிசை பிரிந்திசை மயங்கிசை
என்பனவற்றொடு உறழ நூறாம். அவற்றைக் குறில்அகவல் தூங்கிசைவண்ணம்,
நெடில்அகவல் தூங்கிசை வண்ணம் என வண்ணம் நூறு என்பாரும் உளர்.
அவ்வேறுபாடும் உணர்க.

48

விளக்கம்

  தூங்கிசை வண்ணம் 20  
 

 - முதுபிடி, கோம்பி, நாரை - நடை.

 
  ஏந்திசை வண்ணம் 20  
 

- மதயானை, படமெடுக்கும் பாம்பு,
 ஓங்கிப்பறக்கும் பறவை - நடை.

 
  அடுக்கிசை வண்ணம் 20  
 

- கரட்டு நிலத்தில் வண்டி உருளும்
ஓசை, நாரையோசை, தாராவோசை,
தார்மணிஓசை - நடை.

 
  பிரிந்திசை வண்ணம் 20  
 

- பெருங்குதிரைப் பாய்ச்சல் - நடை.

 
  மயங்கிசை வண்ணம் 20  
 

 - நகரத்து ஓசை, தாரை இயமரம்
இசை, மான் இசை, தேரை
இசை-நடை.

 
இவற்றை விரித்து உரைத்தார் அவிநயனார். அது பின்வருமாறு -