|
விளக்கம் |
உரை நூல் முதலியவற்றின் விளக்கத்தைப் பாட்டியலில் காண்க. (நூற்பா எண் 143-147) இவை வெண்பா முதலியன போல அடிவரையறை இல்லாத அறுவகைச் செய்யுட்கள் என்பது உணர்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| `எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப.' | | | - தொ. பொ. 476 | | |
| `அவைதாம், நூலி னான, உரையி னான, நொடியொடு புணர்ந்த பிசியி னான, ஏது நுதலிய முதுமொழி யான, மறைமொழி கிளந்த மந்திரத் தான, கூற்றிடை வைத்த குறிப்பி னான.' | | | - தொ. பொ. 477 | | |
| `உரையொடு நூலிவை அடியில நடப்பினும் வரைவில என்ப வாய்மொழிப் புலவர்.' | | | - பல்காயம் | | |
| `மொழிபிசி முதுசொல் மூன்று மன்ன.' | | | - பல்காயம் | | |
| `உரையும் நூலும் அடியின்றி நடப்பினும் வரைவில என்ப வயங்கி யோரே.' | | | - பல்காயம் | | |
| `வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு ஆமுறை மூன்றும் அன்ன என்ப.' | | | - பல்காயம் | | |
| `செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை அடியின் நீட்டத் தழகுபட் டியலும்.' | | | - பல்காயம் | | |
| `ஓரடி யானும் ஒரோவிடத் தியலும்.' | | | - பல்காயம் | | |
| `அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆக்கின என்ப அறிந்திசி னோரே.' | | | - பல்காயம் | | |
| `பத்தியம் என்ப பாவொடு பாவினம்; கத்தியம் அவைபோல் கலையல் லனவே.' | | | - தொ. வி. 250 | | |
51 |