செய்யுளியல் - நூற்பா எண் 5

49

 
 
நிரை அசை நான்கற்கும் உதாரணம்;
  `அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிழ்ஒளி வரதனைப்
பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே'
 
 

- யா. கா. 5 மே.

 

எனவும் வரும்.

  `தனிநிலை ஒற்றுஇவை தாம்அலகு இலவே
அளபெடை அல்லாக் காலை ஆன'
 
 

- யா. வி. 3

 
என்ப ஆகலின், நேர் அசை ஓர் அலகும் நிரை அசை இரண்டு அலகும் பெறும்
என்பதூஉம் பெற்றாம்.
  5

விளக்கம்
 

முற்கூறிய - சென்ற நூற்பாவில் கூறிய.

நேர் அசை நான்கு - 1. நெடில் - ஆ - போ
                  2. குறில் - ழி - து
                  3. நெடில் + ஒற்று - வேல் - சாந்
                  4. குறில் + ஒற்று - வெள் - தம்
நிரை அசை நான்கு - 2 குறில் - வெறி - அணி
                  குறில் + நெடில் - சுறா - அசோ
                  2 குறில் + ஒற்று - நிறம் - திகழ்
                  குறில் + நெடில் + ஒற்று - விளாம் - நடாத்

நேரசையில் ஒற்று நீங்கலாக ஓர் எழுத்தும் நிரையசையில் ஒற்று நீங்கலாக இரண்டு
எழுத்தும் காணப்படுமாறு நோக்குக.

ஒத்த நூற்பாக்கள்

  `குறிலே நெடிலே குறில்இணை குறில்நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையும் என்றிசின் பெயரே.'
 
 

- தொ. பொ. 315