| கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச் செழுநீர்பவளத் திரள்காம்பின் முழுமதிபுரையும் முக்குடைநீழல் வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப அநந்தசதுட்டயம் அவைஎய்த நனந்தலைஉலகுடன் நவைநீங்க மந்தமாருதம் மருங்கசைப்ப அந்தரதுந்துபி நின்றியம்ப விலங்குசாமரை எழுந்தலமர நலங்கிளர்பூமழை நனிசொரிதர இனிதிருந்து அருள்நெறி நடாத்திய ஆதிதன் திருவடி பரவுதும்; சித்திபெறல் பொருட்டே' | | | - யா. கா. 9 மே. | | |
எனவும், [நாலசைச் சீர்கள் மூவகைச் சீர்கள் போல இறுதி அசை பற்றிக் கொள்ளப்படல் வேண்டும் - பூவைக் காயாகவும் நிழலைக் கனியாகவும் கொள்ளல்வேண்டும்.] |
நிரை அசைச்சீர் இயற்சீரே போல நின்று வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையாயும் நேர் அசைச்சீர் இயற்சீரே போல நின்று வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றினமையின் ஆசிரியத்தளையாயும் வந்த செய்யுள் : |
| `உரிமை யின்கண் இன்மையால் அரிமதர் மழைக் கண்ணா செருமதி செய் தீமையால் பெருமை கொன்ற என்பவே' | | | - யா. கா. 11 மே. | | |
எனவும் வரும். பிறவும் அன்ன. | (9) |
[அசைச்சீருள் நேர்அசைகள் தேமாஞ்சீர் போலவும் நிரை அசைகள் கருவிளஞ்சீர் போலவும் கொள்ளப்படும். மழை, நிரை; செய் - நேர்.] |