சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் | - | கூழை | வெள்வளைத் தோளும் சேயரிக் கருங்கணும் | - | மேற்கதுவாய் | இருக்கையும் நிலையும் ஏந்துஎழில் இயக்கமும் | - | கீழ்க்கதுவாய் | துவர்வாய்த் தீஞ்சொலும் உவந்துஎனை முனியாது | - | முற்று | என்றும் இன்னணம் ஆகுமதி, | | | பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே!' | - | யா. கா. 20 மே. | |
எனவும், |
|
இணை இயைபு முதலிய இயைபு விகற்பம் ஏழும் வந்த செய்யுள் : |
`மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே | - | இணை | மற்றதன் அயலே முத்துறழ் மணலே | - | பொழிப்பு | நிழலே இனிஅதன் அயலது கடலே | - | ஒரூஉ | மாதர் நகிலே வல்லே இயலே | - | கூழை | வில்லே நுதலே வேற்கண் கயலே | - | மேற்கதுவாய் | பல்லே தளவம் பாலே சொல்லே | - | கீழ்க்கதுவாய் | புயலே குழலே மயிலே இயலே அதனால் | - | முற்று | இவ்வயின் இவ்வுரு இயங்கலின் | | | எவ்வயி னோரும் இழப்பர்தம் நிறையே' | - | யா. கா. 20 மே. | |
எனவும், |
இணை அளபெடை முதலிய அளபெடை விகற்பம் ஏழும் வந்த செய்யுள்: |
`தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப் | - | இணை | பூஉக் குவளைப் போஒ தருந்திக் | - | பொழிப்பு | காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய் | - | ஒரூஉ | மாஅத் தாஅள் மோஒட் டெருமை | - | கூழை | தீஇம் புனலிடைச் சோஒர் பாஅல் | - | மேற்கதுவாய் | மீஇன் ஆஅர்ந்து உகளும் சீஇர் | - | கீழ்க்கதுவாய் | ஆஅ னாஅ நீஇள் நீஇர் | - | முற்று | ஊரன் செய்த கேண்மை | | | ஆய்வளைத் தோளிக்கு அலர்ஆ னாதே' | - | யா. கா. 20 மே. | |
எனவும் வரும். பிறவும் அன்ன. |