| `அடிமுதல் ஓரெழுத்து அடிமுதல் தொடையே.' | | |
| `முதலெழுத்து ஒன்றி முடிவது மோனை.' | | |
| `ஏனையது ஒன்றின் எதுகைத் தொடையே.' | | |
| `முதலெழுத்து அளவொத்து அயலெழுத்து ஒன்றுவது | | |
எதுகை அதன்வழி இயையவும் பெறுமே.' | - | பல்காயம் |
| `முதலெழுத்து ஒன்றுவ; மோனை எதுகை | | |
| முதலெழுத்து அளவோடு ஒத்தது முதலா | | |
அதுஒழித்து ஒன்றின் ஆகும் என்ப.' | - | பல்காயம் |
| `ஆதி எழுத்தே அடிதொறும் வரின்அடி | | |
| மோனைத் தொடையென மொழிமனார் புலவர்.' | - | யா. வி. 35 |
| `இரண்டாம் எழுத்தொன்று இயைவதே எதுகை.' | - | யா. வி. 36 |
| `மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே.' | | யா. வி. 38 |
| `இறுவாய் ஒப்பின்அஃது இயைபு எனப்படுமே.' | | யா. வி. 40 |
| `அளபெடை ஒன்றுவது அளபெடைத் தொடையே.' | | யா. வி. 41 |
| `சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே.' | - | பல்காயம் |
| `பொருளினும் மொழியினும் முரணுதல் முரணே.' | - | நத்தத்தம் |
| `பொருளினும் சொல்லினும் முரணத்தொடுப்பின், | | |
| முரண்என மொழிப முந்தை யோரே.' | - | மயேச்சுரம் |
| `மறுதலை உரைப்பினும் பகைத்தொடை ஆகும்.' | - | அவிநயம் |
| `மொழியினும் பொருளினும் முரணத் தொடுப்பின், | | |
| இரணத் தொடையென்று எய்தும் பெயரே.' | - | காக்கை |
| `இறுவாய் ஒப்பினஃது இயைபுஎன மொழிப.' | - | அவிநயம் |
| `இயைபே இறுசீர் ஒன்றும் என்ப.' | - | பல்காயம் |
| `இறுசீர் ஒன்றின் இயைபெனப் படுமே.' | - | நத்தத்தம் |
| `அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும்.' | - | பல்காயம் |
| `அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும்.' | - | நத்தத்தம் |