New Page 1

100 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

     ஏற்புழிக் கோடலான் மங்கலச்சொல்லை இடைக்கண் வைப்புழி ஈறு
திரிதலும் உண்டு என்றவாறு.                        

 (12)

விளக்கம்

 

     நிறுத்தமுறை - இவ்வியல் பத்தாம் நூற்பாவில் நிறுத்தமுறை. ஏனைய பொருத்தங்களின் நிறுத்தமுறையும் அதுவே. உரையை, நிற்றலுடனே, குற்றம் மூன்றும் இன்றிச் செய்யப்படுவது என முடிபு கொள்க.

 

     முதற்சொல், பலபொருள் தருதலும் வகையுளியாய்ப் பிரிக்கப் படுதலும் ஈறுதிரிதலும் இல்லாது, விழுமிய பொருள் தரும் மங்கலச்சொல்லாக அமைதல் வேண்டும் என்பது.

 

     மங்கலச் சொல்லிற்கு ஏனைய பொருத்தங்கள் கருதி அடைமொழியை முன்புணர்த்தால் மங்கலச்சொல் சீரின் இடையே வரும். அத்தகைய நிலையில் அடையடுத்த மங்கலச்சொல்லாலாகிய முதற்சீர் ஈறுதிரியினும் இழுக்கு இன்று; அந்நிலையிலும் திரியாமையே மேதக்கது என்பதாம்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘மூன்றுஐந்து ஏழ்ஒன் பான்எழுத்து ஆன்ற

     ஒற்றுடன் எண்ணிமுன் சொற்ற முறையின்

     பல்பொருள் படவரூஉம் சொல்லால் அகற்றி

     ஒருபொருட் டாகி வருமொழி பற்றித்

     திரிதல் ஒழியத் திருந்திய சொல்லினுள்

     தெரிவோர் வகையுளி மறுத்து நட்டது

     மங்கலச் சொல்என வகுத்தனர் புலவர்.’

- பன். பாட். 140.

 

  ‘முன்னிலை எழுத்தின் வியநிலை நலனே;

   சமநிலை ஆயின் முதல்வற்கு ஊனம்.’  

- பன். பாட். 141.