New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 11, 12

101   


                                 

     ‘எடுத்த முதல்மொழி ஈறுதிரிந்து ஒன்றலும்

     வகுத்த அச்சீர் வகையுளி சேர்தலும்

     பொதுப்பட மொழிதலும் பொருட்புலன் இன்மையும்

     சிறப்பொடு படாமையும் சிறுபெயர் பிளத்தலும்

     அறத்துள் வழீஇய ஆனந் தம்மே’         

  - பன். பாட்.

 

     ‘வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்

     தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்

     பொருள்இன்மை ஈறு திரிதலே போல்வ

     தருமுதற்சீர்ச் சொற்காகும் தப்பு.’      

- வெண். பாட். 3

 

     ‘பொருள்தெரியாமை, சிறப்பின்றி நிற்றல், பொருள்பலவாய்

     வருமொழிஆதல், வகையுளி சேர்தல், வருஞ்சீருடன்

     திரிதரும் ஈறுஉடைத்தாதல், எடுத்தஅச்சீர்ச் செய்யுமேல்

     சரிவளையாய்! அதுதான் அமையாதுஎன்று சாற்றுவரே.’

                                           - நவ. 4

 

     ‘நாமவகை யுளிசேர்தல், பொருளது இன்மை,

          நலமிலதாய் வைத்தல், பல பொருளாய்த் தோன்றல்,

     ஆம்இனிய சொல்ஈறு திரிதல், போலும்

          ஆதிமொழிக்கு ஆகாஆ னந்தம் ஆமே.’

                                      - சிதம். பாட். 18

    

     ‘சொல்லின் பொருத்தம் சொல்லுங் காலை

     அரிதுணர் சொல்லும் அருந்திரி சொல்லும்

     திரிபுடைச் சீரும் தீதாம் முதற்கே.’     

- தொ. வி. 286

 

     ‘சீர்நனி திரிதல், சிறப்பின்றாய் நிற்றல்,

     ஈறு திரிதல், இரும்பொருள் இன்மை,

     பலபொருள் பயத்தல், முதலிய பிறவும்

     முதற்சீர் மொழிக்குஆ காவென மொழிப.’

                                      - மு. வீ. யா. 67

                                                                                                                                                                                12