New Page 1

104                    

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

வருணப் பொருத்தம் - அந்தணர் வருணம்

 

774. பன்னீ ருயிரும் முன்னொற்று ஆறும்

    மன்னிய அந்தணர் வருணம் ஆகும்.

 

இது நிறுத்தமுறையானே வருணப் பொருத்தம் கூறுவனவற்றுள் மறையோர்
வருணத்திற்கு உரிய எழுத்துக்கள் இவை என்கின்றது.

 

     இ - ள்: பன்னிரண்டு உயிரும் க ங ச ஞ ட ண என்னும் ஆறு
ஒற்றும் மறையோர் வருணத்திற்கு உரிய எழுத்தாம் என்றவாறு.

 

     ஒற்று எனப் பொதுப்படக் கூறினாரேனும் உயிரோடு கூடிய மெய்
என்றே கோடும். மேல் வருவனவற்றிற்கும் ஈது ஒக்கும்.  

 (14)

 

விளக்கம்

 

     முன்னர்த் தனி மெய்யினைப் பேட்டிற்கு உரிய எழுத்து என்றலின்
அஃது எடுத்து விளக்கப்பெறாது என்ற கருத்தான் மெய் உயிரோடு கூடிய
மெய்யாகவே கொள்ளப்படுகிறது.

 

ஒத்த நூற்பாக்கள்

 

     ‘நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்

     அறுமுகன் படைத்தனர் அந்தணர் சாதி

     அவையே, அகர முதல பன்னீருயிரும்

     கஙவும் சஞவும் டணவும் ஆகும்.’      

- பன். பாட். 6

 

     ‘ஒழியா உயிர்அனைத்தும் ஒற்றுமுதல் ஆறும்

     அழியா மறையோர்க்(கு) ஆம் என்பர்.’ 

- வெ. பாட். 10

 

     ‘விதியவன் முந்நான்கு உயிர்தரச் செய்ய விரிசடைமேல்

     நதியவன் நாரணன் சேய் இந்திரன் ஞாலம் சூழவரு

     கதிரவன் சோமன் தருமன் வருணன் கனகநிதிப்

     பதியவன் என்றிவர் மூவாறுடம்பு படைத்தனரே.’   

- நவ. 11