பாட்டியல் - நூற்பா எண் 14, 15
|
105 |
‘மால்அயன் சேய்அரன் கண்டனமா மறையோர்க்கு’
- நவ. 12
‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும்
திருமறை யோர்க்கு அடைவே.’
- சித. பாட். 21
‘வரும்உயிர் அடங்கலும் வல்லினப் புள்ளியும்
அந்த ணர்க்காம்.’
- மு. வீ. யா. ஒ. 71
14
அரசர் வருணம்
775. தநபம யரஎனச் சாற்றிய ஆறும்
மனம்மகிழ் அரசர் வருணம் ஆகும்.
இஃது அரசர் வருணம் கூறுகின்றது.
இ - ள்: த ந ப ம ய ர என்னும் ஆறும் அரசர்க்கு உரிய
என்றவாறு.
15
ஒத்த நூற்பாக்கள்
‘துன்னருஞ் சிறப்பின் மன்னவர் சாதி
தநவும் பமவும் யரவும் ஆகும்.’
- பன். பாட். 8
‘அடைவே ஓர்ஆறும் அரசர்க்காம் என்பர்
படையாத சாதிகளின் பண்பு.’
- வெண். பாட். 10
‘காலயன் (சூரியன்) இந்திரன் சந்திரன் கண்டன
காவலர்க்கு.’
- நவ. 12
‘அடைவே ஓர்ஆறு வேந்தர்க்கு.’
-
சித. பாட். 21
‘தந யர பமப் புள்ளி மன்னவர்க்காம்.’
- மு. வீ. யா. ஒ. 72
|