106
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
|
வணிகர் வருணம்
776. லவறன என்னும்
நான்கு புள்ளியும்
இவர்தரு வணிகர்க்கு
எய்தும் என்ப.
இது வணிகர் வருணம் கூறுகின்றது.
இ - ள்: ல வ ற ன
என்னும் நான்கு மெய்யும் பொருட்கண் விரும்பும்
வணிகர்க்கு உரிய எழுத்துக்கள் என்று கூறுவர் ஆசிரியர்
என்றவாறு.
16
ஒத்த நூற்பாக்கள்
‘அணிமிகு சிறப்பின்
வணிகர் சாதி
லகரமும் வகரமும்
றகர னகரமும்.’
- பன். பாட். 10
‘பண்பார் வணிகர்க்காம்
பாங்கில் லவறனக்கள்.’
- வெண். பாட். 11
‘நிதிக்காலையன்
(குபேரன்) அந்தகன் கண்டன ஆகும்
வணிகர்க்கு.’
- நவ. 12
‘ஏதில் லவறனக்கள்
வணிகர்க்காம்.’
-
சித. பாட். 21
‘லவறன வணிகர்க்காம்.’
- மு. வீ. யா. ஒ. 72
16
வேளாளர் வருணம்
777.
ழளஎனும் இரண்டும் வளமையர்க் காகும்.
இது நான்காம் வருணத்திற்கு
உரிய எழுத்துக்கள் இவை என்கின்றது.
இ - ள்: ழ ள என்னும்
இரண்டு எழுத்தும் சூத்திர வருணத்திற்கு உரிய
எழுத்துக்களாம் என்றவாறு.
17
|