பாட்டியல் - நூற்பா எண்
17, 18 |
107 |
ஒத்த நூற்பாக்கள்
ஏத்திய மரபின்
சூத்திரர் சாதி
ழகரமும் ளகரமும்
ஆகும் என்ப.’
- பன். பாட். 13
‘பண்பாவும் சூத்திரர்க்காம்
மற்றையவை.’
- வெண். பாட். 11
‘வேலையன்
(வருணன்) கண்டன வேளாளருக்கு
விலக்கல்லவே.’
- நவ. 12
‘மற்றை, எழுத்துளவை
சூத்திரர்க்காம் இயன்றசாதி.’
- சித. பாட். 21
‘வருணப் பொருத்தமே
வரும்உயிர் அடங்கலும்
கம்முதல் ஆறும் கைசிகர்க்கு
ஆகும்;
தம்முதல் ஆறும் தகும்மன்
னவர்க்கே;
லவறன வணிகர்க்காம்;
ழளச் சூத்திரர்க்கே;
இம்முறை நஞ்செழுத்து
இயலினும் இழுக்கா.’
-
தொ. வி. 291
‘பின்னவர் காம் ழள பேசுங்காலே.’
- மு. வீ. யா. ஒ. 72
17
எழுத்துக்களைப் படைத்த
இறைவர்
778. பன்னீ ருயிரும்
முன்அயன் படைத்தனன்;
மன்னிய அரன்அரி
மயிலோன் புனிதன்
ஞாயிறு திங்கள்
நடுவன் வருணன்
ஏயும் நிதிக்கோன்
இரண்டுஇரண்டு ஆகப்
படைத்தனர் ஈரொன்
பான்ஒற் றையுமே.
இது மேற்கூறிய உயிர் ஒற்றுக்களுக்கு
எய்தாதது எய்துவிக்கின்றது.
இ - ள்: பன்னிரண்டு
உயிர்களையும் பிரமன் உண்டாக்கினன். பதினெட்டு
மெய்யினையும் இரண்டு
|