108                               இலக

108                     

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


 

இரண்டாக முறையே எக்காலத்தும் எப்பொருட்கண்ணும் உளன் என
நிலைபெற்ற அரனும் அரியும் முருகனும் இந்திரனும் ஆதித்தனும் சந்திரனும்
இயமனும் வருணனும் குபேரனும் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர்
என்றவாறு.                         

  (18)

ஒத்த நூற்பாக்கள்

 

‘நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்

அறுமுகன் படைத்தனர் அந்தணர் சாதி.’    

 ’’     7

‘திருமால் அரனே திசைமுகன் குமரன்

 மரபில் படைத்தனர் மறையவர் சாதி.’    

 ’’     8

‘இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தனர்

 துன்னருஞ் சிறப்பின் மன்னவர் சாதி.’            

 ’’     9

‘இந்திரன் இரவி சோமன் இம்மூவர்

 தந்த எழுத்தே அரசர் சாதி.’   

 ’’     10

‘திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன

 அணிமிகு சிறப்பின் வணிகர் சாதி.’         

 ’’     11

‘கூற்றுவன் படைத்தனன் கூற்றன இரண்டும்

 ஏத்தியல் மரபின் சூத்திரர் சாதி.’    

 ’’     12

‘இயமன் படைத்தனன் இருவகை எழுத்தும்

 துகளறு மரபின் சூத்திரர் சாதி.’    

 ’’     13

‘ஒற்றுமைக் காலையும் வேற்றுமைக் காலையும்

 பிறவியும் வருணமும் பெறும்என மொழிப.’   

 ’’     14

‘நால்வகை வருணத் தோர்க்கும் நால்வகை

 இயம்பும் எழுத்தை இயம்புவர் முதல்மொழி ;

 மற்றவை மயங்கினும் வரையார் ஆண்டே.’     

 ’’     17