பாட்டியல் - நூற்பா எண் 18, 19
|
109 |
‘மக்கட்சாதி நான்கிற்கும் வகுத்த
தத்தம் சாதி எழுத்தே அவரவர்க்கு
வைத்துமுன் எடுப்பின்அது மாண்பு உடைத்தே;
மயங்கினும் வரையார் பயன்பட வரினே.’
- பன். பாட். 18
‘அரன்அரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்கும் பேசு.’
- வெண். பாட். 11
‘ஓதிமன்றன் படைப்புயிரே ; அரன்மால் செவ்வேள்
உம்பர்கோன் பரிதிமதி மறலி நீர்க்கோன்
காதல்அள கேசன்முதல் இவ்விரண்டாய்க்
கம்முதல்மூ வாறொற்றும் கருதிச் செய்தார்.’
- சித. பாட். 21
18
அமுத எழுத்து
779. கசதப நமவ ஏழொடும் அகரம்
இகரம் உகரம் எகரம் நான்கும்
அமுத எழுத்தென்று அறைந்தனர் புலவர்.
இது நிறுத்த முறையானே உண்டி கூறுவனவற்றுள் அமுத உண்டி இவை என்கின்றது.
இ - ள்: க ச த ப ந ம வ என்னும் ஏழொடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு
உயிரும் முன்மொழிக்கு ஆம் அமுத எழுத்துக்கள்
என்று கூறினர் புலவர்என்றவாறு.
(19)
ஒத்த நூற்பாக்கள்
‘அமுதென விடமென வரும்இரு வகையும்
உணவுஎனப் புலவர் உரைத்தனர் உளரே.’
- பன். பாட். 31
‘நஞ்சென அமுதென நவிலவும்
படுமே.’ ’’ 32
|