New Page 1

 

பாட்டியல் -முன்னுரை

11


 

   களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்ற
 பதினெட்டு உறுப்புக்களை உடைத்தாய் மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
 வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம்,
 வஞ்சித்துறை, வெண்டுறை என்ற பாப்பாவினங்கள் அமைய இடைஇடையே
 வெண்பாவும் கலித்துறையும் கொண்டு அத்தாதித் தொடையாக இறுதியும்
 முதலும் மண்டலிக்கத் தேவருக்கு நூறு, அந்தணருக்குத் தொண்ணூற்றைந்து,
 அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சருக்கு எழுபது, வணிகருக்கு ஐம்பது,
 வேளாளருக்கு முப்பது என்ற பாடல் வரையறை அமைய இந்நூல்
 பாடப்படுவதாகும்.

 

3.   பன்மணி மாலை

 

    கலம்பக உறுப்புக்கள் பதினெட்டனுள் ஒருபோகு அம்மானை ஊசல்
 என்பன தவிர ஏனைய அமையக் கலம்பக இலக்கணத்துள் ஏனையகொண்டு
 பாடப்படுவது.

 

4.   மும்மணிக் கோவை

 

    அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை மூன்றும் ஒன்றன் பின்
 ஒன்றாக அமைய இவ்வாறு அகவலை அடுத்து வெண்பாவும் வெண்பாவை
 அடுத்துக் கட்டளைக்கலித்துறையுமாக முப்பது பாடல்கள் அந்தாதித்
 தொடை அமையப் பாடப்படுவது.

 

5.   அகப்பொருட்கோவை

 

    முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பனவற்றை
 உட்கொண்டு களவு கற்பு என்ற இரு பெரிய பிரிவுகளை உடையதாகி,
 நானூறு கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் திணை கைகோள்கள் முதலிய
 பன்னிரண்டு உறுப்புக்களும் குறைபாடின்றி விளங்கக் கூறப்படுவது
 அகப்பொருட் கோவை ஆகும்.
 

6.   தொகைச் செய்யுள்

 

    அளவால் நெடுந்தொகை குறுந்தொகை முதலாகவும் பாட்டால்
 கலித்தொகை முதலாகவும் கூறப்படும் தொகைச் செய்யுட்கள்
 பலவகைப்படும்.