110
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘உணவே அமுதமும் விடமும் ஆகும்.’
- பன். பாட். 33
‘உயிர்க்குறில் நான்கொடு க ச த ப ந ம வ
மயக்கற அமுத எழுத்தாகும் என்ப.’
’’ 34
‘இவ்வுயிர் மெய்யோடு இயைந்தன
கொளலே.’
’’ 35
‘நஞ்சாம் ஒற்றொடு நடந்த உயிர்களும்
வஞ்சமில் புலவர் மறுத்திலர் என்ப.’
’’ 40
‘இருவகை உண்டிஎன்று எடுத்தன அல்ல
தாமே நிற்பினும் தோமில என்ப.’
’’ 41
‘நஞ்சம் அமுதமாம் மங்கலம் புகினே.’
’’ 42
‘அமுதஎழுத் தென்ற ஆதிஉயிர் நான்கொடும்
புணர்ந்த மெய்யை உணர்ந்துஅமுது என்ப.’
’’ 43
‘மெய்யாம் அமுதின் மேவிய உயிரும்
பொய்தீர் புலவர் பொருந்தின என்ப.’
’’ 44
‘மதித்த் கசதநப மவ்வோடு வவ்வும்
உதித்தமைந்த நாற்குற் றுயிரும் - துதித்தமுதென்(று)
ஆதி மொழிக்கும் தசாங்கத் தயலுக்கும்
தீதிலவே என்றார் தெரிந்து.’
- வெண். பாட். 8
‘குறில்முதல் நான்கும் கசதந பமவக் குற்றெழுத்தும்
அறிவோர் அமுதஎழுத்தாம் என்று அறைவர்; தசாங்கத்தயல்
உறுவனவாயின் உலகோர் புகழ்நன்மை எய்தும்என்ப.’
- நவ. 8
‘உரிய க ச த ந ப ம வ ஏழோடு ஆதி
உயிர்க்குறில் நான் கிவைஅமுதம் ஆதிச்சீர்க்கும்
அரியதசாங்கத் தயற்கும் நலமதாகும்.’
- சித. பாட். 20
‘உணவுஎண,
அ இ உ எ க ச த ந ப ம வ என்று
அமுதெழுத் தாகி ஆதிச் சீர்க்கும்
தசாங்கத் தயற்கும் தருவன என்ப.’
- தொ. வி. 290.
‘அ இ உ எ க ச த ந ப ம வவும்
அமுத எழுத்து.’
- மு. வீ. யா. ஒ. 71
19
|