பாட்டியல் - நூற்பா எண் 20
|
111 |
நச்செழுத்து
780. யரலள என்னும் எழுத்தினை ஊர்ந்த
ஆவும் ஓவும் அந்நாற் புள்ளியும்
ஆய்தமும் மஃகான் குறுக்கமும் அளபும்
எய்தா நஞ்சுஎன்று இகழ்ந்தனர் புலவர்.
இது நச்செழுத்து இவைஎன விலக்குகின்றது.
இ - ள்: யரலள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும்
அவ்வொற்றுக்களும் ஆய்தமும் மகரக்குறுக்கமும் அளபெடையும் நச்செழுத்தாம்;
இவை ஆதிமொழிக்கு ஆகாதன என்று கூறுவர் புலவர் என்றவாறு
எய்தா என்ற மிகையான் எடுத்த மங்கல மொழிக்கண் இவ்வெழுத்துக்கள்
வரின் அவை குற்றம் உடைய அல்ல எனக்கொள்க.
(20)
ஒத்த நூற்பாக்கள்
‘ஆஓ இரண்டும் யரல மூன்றும்
தாவில்இவ் விருவகைக் கூட்டத்து இயைந்தவும்
அளபும் ஆய்தமும் ஐவகைக் குறுக்கமும்
உளமலி புலவர் உரைத்தனர் நஞ்சென்று;
அவைஒரு பெயர்மருங்கு அணைய நிற்பின்
நவையுறு துஞ்சலும் நடுக்கமும் செய்யும்.’
- பன்.
பாட். 36
‘இருவகைக் கூட்டத்து இயைந்தமேற் கூறிய
ஆகார ஓகாரத் தொடுய ரலக்கள்
என்றும் ஒற்றொடு இயைந்தஉயிர் அளபெடை.’
- பன்.பாட்.37
|