பாட்டியல் - நூற்பா எண் 20, 21

113


 

     ‘உணவு எண,

     யா யோ ராரோ லாலோ அவற்றொற்றும்

     அளபெடை மக்குறள் ஆய்தம்நஞ் செழுத்தே.’               

 - தொ. வி. 290

 

     ‘யா யோ ராரோ லாலோ

     அவற்றின் ஒற்றும் அளபெடை மக்குறள்

     ஆய்தமும் நஞ்செழுத் தாம்முத லாம்பின்

     ஆகா என்மனார் அறிந்திசி னோரே.’                     

- மு. வீ. யா. ஒ. 71

                                                                      20

உண்டிப்பொருத்தப் புறனடை

 

781. இத்திறம் தசாங்கத் தயற்கும் இயையும் 

இது மேற்கூறியதற்கு எய்தாதது எய்துவிக்கின்றது.

 

     இ - ள்: அமுத எழுத்தும் நச்செழுத்தும் முதல் மொழிக்கே அன்றித்
தசாங்கத்தயலிலும் வருதலும் வாராமையும் பொருந்தும் என்றவாறு.

 

    இச்சூத்திரம் பருந்தின் வீழ்வு.                                         

 (21)

 

விளக்கம்

     அரசனுடைய பத்து அங்கங்களையும் பத்து ஆசிரிய விருத்தங்களால்
ஒவ்வோரங்கத்தினையும் சிறப்பித்து ஒவ்வொரு பாடலாக அமைக்கும் பிரபந்தம்
தசாங்கத்தயலாகும். அதற்கும் பாட்டுடைத்தலைவனுக்கு ஏற்ற அமுத எழுத்தாலேயே
பிரபந்தத்தைத் தொடங்குதல் வேண்டும் என்பது.

 

     இந்நூற்பா 468 ஆம் நூற்பாவோடு தொடர்புகோடல் பருந்தின் வீழ்வாம்.

 

ஒத்த நூற்பாக்கள்

 

தசாங்கத்தயலின் இலக்கணத்தை,

 

     ‘அரசன் தசாங்கம் ஆசிரிய விருத்தம்

      ஐயிரண்டு அறைவது தசாங்கத் தயலே.’

                                 - மு. வீ. யா. ஒ. 141. தொ. வி. 283 உரை

என்பதனான் அறிக.

15-16