114
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘அமுதென்று, ஆதிமொழிக்கும்
தசாங்கத் தயலுக்கும்
தீதிலவே என்றார்
தெரிந்து.’
- வெண். பாட். 8
‘மலையாறு நாடுஊர்
மலர்த்தார் வயப்பரி மாமதத்த
கொலைஆர் களிறு
கொடிமுரசு ஆணை குவலயத்தும்
தலையான நூலோர்
தசாங்கமது என்பர்; தமதுஅயலே
கொலையான
சொற்பொருள் தோன்றிடில் ஆனந்தம்
கூறுவரே.’
- நவ. 10
‘அமுதம் ஆதிச்சீர்க்கும்
அரிய தசாங்கத்து
அயற்கும்
அமைவதாகும்.’
- சிதம். பாட். 20
‘உணவெண, தசாங்கத்
தயற்கும் தகுவன என்ப.’
- தொ. வி. 29
21
தசாங்கம்
782. மலைநதி நாடுஊர்
வனைதார் இவுளி
கொலைமத களிறு
கொடிமுரசு ஆணை
இவையே தசாங்கம்
என்மனார் புலவர்.
இது தசாங்கம் ஆவன இவை
என அவற்றின் பெயரும் முறையும் கூறுகின்றது.
இ - ள்: மலையும்
நதியும் நாடும் ஊரும் புனைதாரும் குதிரையும் கோறல்தொழில் உற்ற மதவேழமும் கொடியும் முரசும் ஆக்கினையும்
ஆகிய இவை பத்தும் தசாங்கம் என்று கூறுவர் புலவர் என்றவாறு.
இச்சூத்திரம்
பொருள் இயைபு பற்றிக் கூறினார், சார்பு நூல் ஆகலான்.
(22)
ஒத்த நூற்பாக்கள்
‘மலையே யாறே நாடே
ஊரே
பறையே பரியே
களிறே தாரே
பெயரே கொடியே என்றிவை
தசாங்கம்.’
- பன். பாட். 240
|