பாட்டியல் - நூற்பா எண் 22, 23

115


    

    

     ‘புல்லும் மலையாறு நாடூர் புனைதார்மா

     கொல்லும் களிறு கொடிமுரசும் - வல்லகோல்

     என்றிவை நஞ்செழுத்தோ டேலா வகையுரைப்ப

     நின்ற தசாங்கமென நேர்.’           

- வெண். பாட். செ. 19

 

     ‘........மலைநதி நாடுஊர்தார், பரிகளிறு கொடிமுரசு

     செங்கோல் ....... மெத்துதசாங்கம்.’           

- சித. பாட். 32

                                                     22

 

தானப்பொருத்தம்

 

783. குற்றெழுத்து ஐந்தும் ஒத்தநெட் டெழுத்தொடு

    ஐஒள என்னும் ஆயீ ரெழுத்தை

    இஉ என்னும் இரண்டொடும் சேர்த்திப்

    பால குமார இராச விருத்த

    மரணம் என்ன வகுத்துஇறை வன்பெயர்

    முதல்எழுத் தினைமுதல் பொருத்தம தாக

    முதற்சீர் இடத்து முதற்கண் நின்ற

    எழுத்தொடு தாக்கி இடம்முதல் மூன்றும்

    விழுத்தகு மூப்பும் மரணமும் விலக்கே.

 

இது தானப்பொருத்தம் ஆமாறு கூறுகின்றது.

 

     இ - ள் : குற்றெழுத்துக்கள் ஐந்தும் தமக்கு இனம்ஒத்த
நெட்டெழுத்துக்களோடும், ஐகாரஒளகாரம் என்று கூறப்படும்
அவ்விரண்டெழுத்தை இகரஉகரம் என்னும் இரண்டு எழுத்தோடும்,
சேர்த்திப் பாலப் பொருத்தம் குமாரப்பொருத்தம் இராசப்பொருத்தம்
விருத்தப்பொருத்தம் மரணப்பொருத்தம் என வகுத்து, இறைவன் பெயர்
முதல்எழுத்தினைப் பாலப்பொருத்தமாகக் கொண்டு, முதல்மொழி
முதலெழுத்தை நேரிட்டுப் பார்க்க, முதற்கண்நின்ற மூன்றும் நன்மைதரும்
பொருத்தம் உடையன; பின்நின்ற விருத்தப் பொருத்தமும்
மரணப்பொருத்தமும் விலக்கப்படும் என்றவாறு.