116                      இலக

116                   

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


    

   

‘நட்புஅரண் எதிபகை மரணம் ஐந்தனுள்
     ஒப்புடைக் குறிக்கோள் ஒருமூன்று ஆகும்.’
 

என்றார் மாமூலர்.                                 

(23)

 

விளக்கம்

 

     அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பன இனங்களாம்.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து அ ஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ,
 இ ஈ ஐ, உ ஊ ஒள என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
 

     தலைவன் இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தினது ஆயின்
 இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே
 ஏற்றது.
 

     தலைவன் இயற்பெயர் முதலெழுத்து உ ஊ ஒள என்பனவற்றுள்
 ஒன்றுஆயின், உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
 முதற்சீரே ஏற்றது.
 

     தலைவன் இயற்பெயர் முதல் எழுத்து எ ஏ என்பனவற்றுள்
 ஒன்றாயின், எ ஏ, ஒ ஓ, அ ஆ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
 முதற்சீரே ஏற்றது.
 

     தலைவன் இயற்பெயர் முதல் எழுத்து ஒ ஓ என்பனவற்றுள்
 ஒன்றாயின் ஒ ஓ, அ ஆ, இ ஈ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய
 முதற்சீரே ஏற்றது.
 

     அ ஆ இயற்பெயர் முதலெழுத்தாயின் அ ஆ பாலப் பொருத்தம்; இ
 ஈ ஐ குமாரப்பொருத்தம்; உ ஊ ஒள இராசப் பொருத்தம்; எ ஏ
 விருத்தப்பொருத்தம்; ஒ ஓ மரணப் பொருத்தமாம்.
 

     பிறவும் இவ்வாறே இயைத்துக் காண்க. விருத்தப் பொருத்தமும்
 மரணப்பொருத்தமும் கொள்ளத்தக்கன அல்ல. பால குமார ராச விருத்த
 மரணப் பொருத்தங்கள் மாமூலனாரால் முறையே நட்பு அரண் எதி பகை
 மரணம் எனப் பெயரிடப்பட்டன.