‘குறில்ஐந் துடன்நெடில் கூட்டி நின்ற
ஐ ஒள இரண்டும் இஉ அடக்கிப்
பால குமார அரசு மூப்பு
மரணம்என்று ஐவகைத் தானம் வகுத்தனர்.’
|
- பன். பாட். 54 |
‘முன்பின் செய்யுள் முதலெழுத்து அதற்குப்
பொருத்தமும் விருத்தமும் பகையும் கொளலே.’
|
’’
55 |
‘நட்பே உதாசீ னம்பகை என்னும்
ஓப்புடைக் குறிப்பின் ஒருமூன்று ஆகும்.’
|
’’
56 |
‘பால குமார அரச என்னும்
மூவகைத் தானமும் நட்புஎனப் படுமே.’
|
’’
57 |
‘ஒழிந்த இரண்டும்உதாசீனம்பகை.’
|
’’
58 |
‘பாட்டுடைத் தலைவன் இயற்பெயர் முன்னெழுத்துப்
பால னாக நால்வகை எழுத்தும்
வட்டமாய் முறைமையின் இயலும் என்ப.’
|
’’
59 |
‘பெயர்முதல் எழுத்துப் பால னாக
நால்வகை எழுத்தினும் வட்ட மாக
முறையே நட்புஉதா சீனம் பகைவரும்.’
|
- பன். பாட். 60 |
‘அகரம் தனக்காய நட்பென்று உரைப்பர
இகர உகரங்கள் தாம்.’
|
’’
61 |
‘அகரக்கு எகரம் உதாசீனம் ஆகும்;
அகரக்கு ஒகரம் பகை.’
|
’’
62 |
‘உகரம் எகரம் எனஇரண்டும் என்ப
இகரம் தனக்காய நட்பு.’
|
’’
63 |
‘இகரக்கு ஒகரம் உதாசீனம் ஆகும்;
இகரக்கு அகரம் பகை.’
|
’’
64 |