|
118
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘உகர எழுத்துக்கு நட்பாய் வருமே
எகர ஓகரங்கள் தாம்.’
’’ 65
‘உகரக்கு அகரம் உதாசீனம் என்ப;
உகரக்கு இகரம் பகை.’ ’’ 66
‘எகரக்கு ஒகரம் அகரம் நட்பாகும்;
இகரம் உதாசீனம் ஆம்.’
’’ 67
‘எகரம் தனக்குப் பகைஎன்று உரைப்பது
உகர எழுத்தென்று உணர்.’
’’ 68
‘ஒகர எழுத்துக்கு அகர எழுத்தும்
இகர எழுத்தும்நட் பாம்.’
’’ 69
‘ஒகரக்கு உகரம் உதாசீனம் ஆகும்;
எகரம் பகையாம் எனல்.’
’’ 70
‘நட்புப் பகையாம் பகையும்நட் பாம்அவை
வைத்த முறையே கொளல்.’
’’ 71
‘உய்த்துணர்ந்து நாடில் உயிர்மெய்க்கும் இவ்வகையே
வைத்துணர்ந்து கொள்க வகுத்து.’
’’ 72
‘குறில்ஐந்தும் தம்நெடில்கொண்(டு) இஉஐ ஒளசேர்ந்(து)
அறிபாலன் ஆதியா ஐந்தும் - இறைவன்பேர்
முன்எழுத்துப் பாலனில் வைத்(து) எண்ணிமூப் பேமரணம்
என்னுமிவை தீதென்றே எண்.’
- வெண்.
பாட். 6
‘குறில்ஐந்தும் தம்நெடில் கூட்டி இஉஐஒள கொண்டு அடைவே
முறைமையின் பாலன்குமாரன் அரசன் மூப்பே மரணம்
இறையென ஏத்துமவன்பெயர் பாலனா எண்ணிவந்த
நெறிமையின் மூப்பும் மரணமும் பாட்டிடை நீக்கினவே.’
- நவ. 6
|