New Page 1

பாட்டியல் - நூற்பா எண் 23

119


    

     ‘அஆ இஈ ஐயும் உஊ

     ஒளவும் எஏ ஒஓ என்றிவை

     பாலன் குமாரன் இராசன் மூப்பு

     மரணம் முறையே ஐந்தும் எண்ணுக;

     மூப்பும் மரணமும் முதற்சீர்க்கு ஆகா.’

                                        - வெ. பா. மேற். மு. வீ. யா. ஒ. 69

 

     ‘ஊனமிலா அஆவும் இஈஐயும்,

          உஊவும் எஏயும் ஒஓ ஒளவும்

     தானமிதுஐ வகையாம்அந் தாதிதன்னில்,

          தலைவன்பேர் முதலெழுத்தில் பாலனாதி

     மேல்நிரை எண்ணிற்பால குமாரராச வேண்டிடும்

          வேண்டா விருத்த மரணந்தானே.’                      

 - சித. பாட். 19

 

     ‘தானமே,

     குறில்நெடில் தம்முள் இணைந்துஇ உவ்வுடன்

     ஐஒளவும் சேர்புழி ஐந்தாம்; அவற்றுள்

     தலைமகன் இயற்பெயர் தானம் முதலாப்

     பாலன் குமரன் இராசன் மூப்பு

     மரணம்முறை எண்ணி வரும்முதல் எழுத்தின்

     தானம்ஈற்று இரண்டெனின் தவிர்க என்ப.’

                                                    - தொ. வி. 288

                                                                        23

 

எழுத்துப் பொருத்தம்

 

784. எண்ணின் மூன்றுஐந்து ஏழ்ஒன் பான்முதல்

    நண்ணும் அக்கரம்; நாலுஆறு எட்டுஉறா.

 

இஃது எழுத்துப் பொருத்தம் ஆமாறு கூறுகின்றது.

 

    இ - ள்: முதற்சீர் எழுத்தினை எண்ணுமிடத்து வியனிலை ஆகிய மூன்றெழுத்தும்
ஐந்தெழுத்தும் ஏழெழுத்தும் ஒன்பதெழுத்தும் பொருத்தம் உடையனவாம்; சமனிலை ஆகிய நான்கெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும் பொருந்தா என்றவாறு.