New Page 1
12

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


7. இணைமணி மாலை

        

   வெண்பாவும் அகவலும் அடுத்து அடுத்து இணையப் பாடப்படும்
அந்தாதித் தொடையில் அமைந்த நூறு பாடல்கள் வெண்பா அகவல்
இணைமணி மாலையாம். அவ்வாறு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும்
அந்தாதியாக நூறு செய்யுட்கள் அமையின் வெண்பாக் கலித்துறை
இணைமணி மாலையாம்.
         
8. இரட்டை மணிமாலை
         

   வெண்பாவும் கலித்துறையும் முறையான் அந்தாதித் தொடையான்
இருபது செய்யுட்கள் பாடப்படின் இரட்டை மணிமாலை ஆகும்.
 

9. மும்மணி மாலை

         

   வெண்பாவும் கட்டளைக்கலித்துறையும் ஆசிரியப்பாவும்
 அந்தாதித்தொடையான் முப்பது பாடல்கள் பாடப்பெறின் மும்மணிமாலை
 ஆகும்.
         

10. நான்மணி மாலை

         

   வெண்பா கட்டளைக்கலித்துறை விருத்தம் அகவல் என்பன முறையானே

 அந்தாதித் தொடையான் நாற்பது பாடல்கள் பாடப்பெறின் நான்மணி
 மாலையாகும்.
 

11. இருபா இருபஃது

         

   தொடர்ந்து பத்து வெண்பாவும் பின் தொடர்ந்து பத்து ஆசிரியப்பாவும்
 அந்தாதித் தொடையாக இணைந்துவரும் பிரபந்தம் இருபா இருபஃது
 ஆகும்.
 

12. ஒருபா ஒருபஃது

         

   ஆசிரியப்பாவோ வெண்பாவோ கட்டளைக் கலித்துறையோ
 ஒருபொருள்மேல் பத்துப்பாடல்கள் அந்தாதித்தொடையில் அமைத்துப்
 பாடப்பெறின் ஒருபா ஒருபஃது ஆகும்.