120
|
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
‘எண்ணின்’ என்ற
மிகையானே உலகம் அமுதம் ஆரணம் எழுத்து எனப்
பிறழ்ந்து வருமேனும் மங்கலத்தான் அமைவுடைய என்பது.
(24)
விளக்கம்
முதற் சீர்க்கு ஒற்றைப்படை
எண்ணுள்ள எழுத்தே வரல் வேண்டும் என்ற
வரையறை, மங்கலச் சொற்களுக்காயின் இல்லை என்பது.
ஒத்த நூற்பாக்கள்
‘முன்னிலை எழுத்தின்
வியநிலை நலனே;
சமநிலை யாயின் முதல்வற்கு
ஊனம்.’
- பன். பாட். 141
‘தப்பாத மூன்றைந்தேழ்
ஒன்பான் தவறிலஎன்(று)
ஒப்பா முதற்சீர்க்(கு)
உரைசெய்வர் - செப்புங்கால்
தண்டாத நான்காறெட்(டு)
ஆகா தவிர்கென்று
கொண்டார் எழுத்தின்
குறி.’
- வெண். பாட். 5
‘மூன்றுஐந்துஏழ் ஒன்பதுஎழுத்தாய்
வியனிலையாய் முதற்சீர்
தோன்றிடின் நன்று;
இரண்டு ஈரிரண்டு ஆறுஎட்டு
எழுத்துத் தொன்னூல்
சான்றவர்
கொள்ளார் சமநிலைதான் என்று.’
- நவ. 5
‘ஆனஎழுத்து ஒன்பதுஏழ்
ஐந்துமூன்றாம்
ஆகாதுஎட் டாறுநான்கு
ஆதிச் சீர்க்கே.’
- சிதம். பாட். 19
‘எழுத்தின் பொருத்தமே எழுவாய்ச் சீர்க்கண்மூன்று
ஐந்துஏழ் ஒன்பது வியனிலை நன்றாம்;
இரண்டுநான்கு ஆறெட்டுச் சமனிலை வழுவாம்.’
- தொ. வி. 287
‘ஐந்தொடு மூன்றுஏழ்
ஆறொடு மூன்றும்
ஆகும்; நாலாறு எட்டெழுத்து
ஆகாவே.’
- மு. வீ. யா. ஒ. 68
24
|