பாட்டியல் - நூற்பா எண் 25
|
121 |
முதல் ஒன்பது உயிர்களின்
நாள்கள்
785. ஆவி முதல்நான்கு ஆரல்; அப்பால்
மேவிய ஐந்தும் வியன்பூ ராடம்.
நிறுத்த முறையானே நாட்பொருத்தம் கூறுவான் தொடங்கினவற்றுள் இஃது
உயிருள் முதல் ஒன்பது எழுத்திற்கும் நாள் உரிமை கூறுகின்றது.
இ-து: உயிருள் அ ஆ இ ஈ என்னும் நான்கு எழுத்தும் கார்த்திகை
நாளாம்; உ ஊ எ ஏ ஐ என்னும் அப்பால் ஐந்து எழுத்தும் பூராட நாளாம்
என்றவாறு.
(25)
விளக்கம்
நாட்பொருத்தம்
காண எழுத்துக்களுக்கு நாள் வரையறை
செய்யப்பட்டுள்ளது. பாட்டு முதற்சீர் முதல் எழுத்தின் நாள்
பாட்டுடைத்தலைவன் பெயர் முதலெழுத்து நாளோடு ஒத்ததாதல் வேண்டும்.
சில இடங்களில் பாட்டுடைத்தலைவன் பிறந்த நட்சத்திரத்தினைப்
பொருத்தம் காண்டலும் உண்டு.
ஒத்த நூற்பாக்கள்
‘மொழிக்கு முதலா கியஎழுத் துக்கட்கு
ஓதிய நாள்வகை இயற்றுதல் கடனே.’
- பன். பாட். 81
‘உயிர்முதல் நான்கும் செயிர்தபு கார்த்திகை
ஐந்தும் மூன்றும் அவற்றின் அடைவே
வந்தபூ ராடம் உத்திரா டம்மே.’
- பன். பாட். 82
பேசும்உயிர் அடைவே நான்குஆரல் பின்ஐந்தும்
மாசிலாப் பூராடம்.’
- வெண். பாட். 12
‘அகரம்முதல் நான்கும் கார்த்திகை, மற்று அவற்றின்அடைவே
உகரம்முதல் ஐந்தும்பூராடம், உத்திரா டம்ஒழிந்த.’
- நவ. 13
|