New Page 1
122 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                        

     ‘கருதும்உயிர் அடைவே நான்கைந்து மூன்று

          கார்த்திகை பூராடம் உத்திராடம்.’                       

 - சித. பாட். 22

 

     ‘ஆவிநான்கு ஐந்தொடு நான்குமாய்ப் பிரிவது

     கார்த்திகை பூராடம் உத்தி ராடமாம்.’                      

- மு. வீ. யா. ஒ. 73

                                                                       25

 

கடைமூன்று உயிர்களின் நாள்

 

186. மற்றைய மூன்றும் உத்திரா டம்மே.

 

இதுமுதல் பதினொரு சூத்திரங்காறும் சூத்திரத்தால் பொருள் விளங்கக் கிடந்தன.      (26)

 

உயிர்மெய் வருக்க நாள்கள்

 

187. ககர வருக்கத்து ஒருநான்கும் இரண்டும்

    திகழ்திரு வோணம் திருவா திரையாம்;

    பிற்பால் மூன்றும் மூன்றும் பேசின்

    பொற்புறு புனர்தம் பூச மாகும்.

 

188. சகர வருக்கம் தனில்முதல் நான்கும்

    புகலுங் காலைப் புருட நாள்;மேல்

    ஐந்து மூன்றுஅச் சுவினி பரணி.

 

189. உற்ற ஞகரத்து ஒருமூன் றினையும்

    மற்றை அவிட்டம் ஆம்எனப் பகர்வர்.

 

190. மன்னிய தகரத்து இரண்டுஏழ் மூன்று

    தன்னியல் சோதி விசாகம் சதயம்.

 

191.  ஆங்குறு நகரத்து ஆறு மூன்றுமூன்று

    ஓங்கும் பனைதுளங்கு ஒளிபுரட் டாதி.

 

    (பனை என்பது அனுடம். துளங்கொளி என்பது கேட்டை.)