New Page 1

பாட்டியல் - நூற்பா எண். 32 - 36

123


                                

192. நற்பக ரத்தின் நான்குஇரண்டு ஆறு

    முற்படும் உத்திரம் தொட்டு மூன்றே.

 

193. ஆறு மூன்றுமூன்று ஆம்மக ரத்தின்

    தேறும் மகம்கட் செவிஒண் பூரம்.

 

(கட்செவி - ஆயில்யம்.)

 

194. உற்றயா ஒன்றும் உத்திரட் டாதி

    யூ யோ இரண்டும் ஏயும் மூலம்.

 

195. எடுத்த வகரத்து இருநான் கிற்கும்

    மடுத்த ரோகணி மான்தலை ஆகும்.

 

   (மான்தலை - மிருகசீரிடம்)               (35)

 

நாள் பொருத்தம்

 

196. இறைவன் பெயர்முதல் எழுத்தை நோக்கி

    வருநா ளினைமூ வொன்ப தாக்கி

    ஒன்றுமூன்று ஐந்துஏழ் ஒருமுத் திறத்தினும்

    ஒன்றா வண்ணம் உரைமுதற் சீர்க்கே.

 

இது நாள்பொருத்தம் கொள்ளுமாறு எதிர்மறை முகத்தான் உணர்த்துகின்றது

     இ - ள்: பாட்டுடைத்தலைவன் பெயரின் முதல் எழுத்திற்கு உரியநாள்
 தொடங்கி உறுகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப்
 பகுத்துச் சென்மம் அநுசென்மம் உபசென்மம் என்று கூறப்பட்ட
 முப்பகுதியினும் ஒன்று மூன்று ஐந்து ஏழ் எண்ணின் வந்தநாள்கள்
 பொருத்தம் உடைய அல்ல எனக்கொண்டு இரண்டு நான்கு ஆறு எட்டு
 இவைகளின் நின்ற நாள்களைப் பொருத்தம் உடையவாக முதற்சீரை
 எடுத்துச் சொல்லுவர் என்றவாறு.