பாட்டியல் -
நூற்பா எண் 36 |
127 |
‘ஒருநான்கு
உரோகணி வகரம் அவ்வகை
மற்றை
நான்கும் மகசிரம் ஆகும்.’
|
" |
92 |
‘இரண்டுஈ ரிரண்டுஆறு
எட்டுஒன் பானெனத
திரண்ட நாளே செல்வம்
புகுதரும்.’
|
’’ |
94 |
‘நன்மை பொருள்பேறு
இன்பம் தரும்எனத்
தொன்னெறிப்
புலவர் உரைத்தனர் துணிந்தே.’
|
’’ |
95 |
‘அவை, மூவகை ஒன்பதின்
முதன்முதல் நாளாம்.’ |
’’ |
96 |
‘சிறந்தசீர்த்
தலைவன் பிறந்தநாள் ஆயினும்
பெயர்நாள் ஆயினும்
இயல்உற உணர்ந்தபின்
ஒன்றற் கேனும்
இரண்டற் கேனும்
மூன்றுஇகழ் பொருத்தம்
மொழிவது கடனே.’
|
’’ |
97 |
‘ஆரியச் சிதைவும்
அழிந்த வழக்கும்
சீரிய மொழிமுதற்கு
ஆம்எனப் புணர்க்கும்
வம்பப் புலவரும்
மன்னுவர் ஆதலின்
மொழிமு தலாவ கையெழுத்
தெல்லாம்
பன்னீ ருயிரும் மன்ன
அடக்கி
அந்நாள் பெறும்என்று
அறைகுநர் உளரே.’
‘இருப துடனேழ் இயன்ற
நாளை
ஒருவகை ஒன்பான்
ஆக்கி இவ்வகை
மூவகை யாய்ச்செய்து
ஒன்றுமூன்று ஐந்துஏழ்
அட்டம ராசி வைநா
சியக்கால்
விட்டனர் பின்னர்
மேவினர் கொளலே.’
- பண். பாட்.
‘பேசும் உயிர்அடைவே
நான்காரல் பின்னைந்தும்
மாசிலாப் பூராடம்
மற்றொருமூன்(று) - ஆசிலா
பேருத்தி ராடமாம்
என்று பெரிதுணர்ந்தோர்
பாரித்தார் நாளின்
பரிசு.’
- வெண். பாட். 12
‘பரிசுடைய கவ்வரியில்
நான்கிரண்டும் மூன்றும்
தெரிவுடைய மூன்றடைவே
செப்பின் - பிரிவுடைய
ஓணமே ஆதிரையே ஒண்புனர்பூ
சம்பூசம்
பேணி
உரைத்தார் பிரித்து.’
- வெண். பாட். 13
|