128                      இலக
128 

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


                              

     ‘பிரிந்த சகரத்து நான்கைந்(து) பின்மூன்(று)

     அறிந்த கலமுதல் மூன்றாகும் - செறிந்த

     ஞகரத் தொருமூன்றும் நன்குணர்ந்தோர் ஆய்ந்த

     புகர்தீர் அவிட்டமாம் போற்று.’                                   

 ’’    14

 

     ‘போற்றும் தகரம்இரண் டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்

     சாற்றுவர் சோதி முறம் சதயம் - வேற்றனுடம்

     கேட்டைபூ ரட்டாதி கேள்நகரத் தோராறும்

     வாட்டமிலா மும்மூன்றும் வந்து.’                           

 - வெண். பாட். 15

 

     ‘வந்த பகரத்து நான்கிரண்டா றுத்திரந்தொட்(டு)

     அந்தமிலா மூன்றாகும் அவ்வடைவே - வந்ததற்பின்

     ஆறுமகம் மூன்றுடன்மூன்(று) ஆயிலியம் பூரமாம்

     மாறில் மகரத்தின் மாட்டு.’                               

  - வெண். பாட். 16

 

     ‘மாட்டும் யகரத்துள் யாவுத் திரட்டாதி

     ஈட்டியயூ காரயோ காரங்கள் - காட்டிய

     மூலம் வகரத் தொருநான்கு ரோகணியாம்

     தோலாத நான்கெனவே சொல்.’                            

- வெண். பாட். 17

 

     ‘சொல்லியநாள் மூவொன்ப தாகத் துணிந்தொன்று

     புல்லிய மூன்றைந்தேழ் பொருந்தாவாம் - அல்லனவற்(று)

     அட்டம ராசி வயினா சியமிவையும்

     விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.’                     

 - வெண். பாட். 18

 

     ‘உயிர் மெய்யில்,

     ககரம்முதல் நான்கும் ஓணம்என்று ஓதுவர்கற்றவரே.’

                                                                   - ந. 13

 

     ‘ஏனைக் குகரம்முதல்இரண்டு ஆதிரை,என்பர், அப்பால்

     ஆனஎழுத்து ஒருமூன்றும் புனர்பூசமாம் அடைவே

     போனபின், நின்றன மூன்றெழுத்தும் பூசம்என்ப.’

                                                                   - ந. 14

    

     ‘ஏய்ந்த சகரம் இரேவதிநாள்முதல் மூன்றினுக்கும்

     வாய்ந்தஎழுத்து ஒருநான்கு ஐந்துமூன்றாம்

                                  அவற்றின்வர்க்கத்து

 

     ஆய்ந்த ஞம்மூன்றும் அவிட்டம் என்றாயின.’

                       

- ந. 15