பாட்டியல் -
நூற்பா எண் 36, 37 |
131 |
‘ஆவிநான்கு ஐந்தொடு நான்குமாய்ப் பிரிவது
கார்த்திகை பூராடம்உத் திராடமாம்; மெய்யில்
ககரம்நான்கு இரண்டு மூன்று மூன்றுஇவை
ஓணம்ஆ திரைஇரு பூசமாம் முறையே;
சகரம்நான்கு ஐந்துமூன்று இரேவதி அச்சுவினி
பரணி;ஞ ஞாஞெஞொ அவிட்டம்; ஏனைய
தகரம் இரண்டுஏழு தான்கடை மூன்று
சோதி விசாகமே தூயவான் சதயம்;
நவ்வரி ஆறுடன் நாடும்மும் மூன்றும்
அனுடம் கேட்டை ஆய்பூரட் டாதி;
பகரம்நான்கு இரண்டொடு ஆறும்உத் திராடம்
அத்தம் சித்திரை; மவ் வாறோடு மூன்றும்
மூன்றும் மகம்ஆ யிலியம் பூரம்;
யய்யா உத்திரட் டாதி, யுய்யோ
மூலம்; வவா விவீரோகணி, வெவ்வே வைவௌ
மிருகசீ ரிடமென விளம்பினர் புலவர்.’
-மு. வீ. யா. ஒ. 73
‘நாயகன்
முதற்பெயர் ஆதிஎழுத் தின்நாள்
முதற்கொண்டு
ஒன்பது ஒன்பது ஆக
மங்கலச்
சொல்முதல் எழுத்தின்நாள் அளவும்
எண்ணி
இரண்டும் நான்கும் ஆறும்
எட்டும்
ஒன்பதும் காணின் நல்லவாம்;
ஒன்றும்
மூன்றும் ஐந்தும் ஏழும்
காணின்
தீங்குஎனக் கருதப்படுமே.’
-மு.
வீ. யா. ஒ.74
36
முதற்சீர்க்கு ஒருதனி இலக்கணம்
197. எட்டாம் இராசியும் வைநா சிகமும்
விட்டு முதற்சீர் விளம்புதல் மரபே.
இஃது அம் முதல்சீர்க்கு
எய்தாதது எய்துவிக்கிறது.
|